சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்


சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்
x
தினத்தந்தி 14 July 2020 2:41 PM IST (Updated: 14 July 2020 2:41 PM IST)
t-max-icont-min-icon

சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடிய தூக்கிய சச்சின் பைலட் துணை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சச்சின் பைலட்டிற்கு ஆதரவு தெரிவித்த இரண்டு மந்திரிகளின் பதவியும் பறிக்கப்பட்டது.

துணை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் தனது டுவிட்டர் முகப்பு பக்கத்தில், துணை முதல் மந்திரி, ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் என்று பதிவிட்டு இருந்ததை சச்சின் பைலட் நீக்கினார். மேலும், அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது” என்று தெரிவித்தார்.


Next Story