பீகாரில் பா.ஜ.க. அலுவலகத்தில் 24 பேருக்கு கொரோனா
பீகாரில் பா.ஜ.க. அலுவலகத்தில் 24 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
பாட்னா,
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பா.ஜனதா மாநில தலைமை அலுவலகத்திற்கு சமீபத்தில் கொரோனா நோயாளி ஒருவர் வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்குள்ள கட்சி நிர்வாகிகள், அலுவலக ஊழியர்கள் உள்பட 110 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாநில துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
பா.ஜ.க. அலுவலகத்தில் சமூகஇடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடியதாலேயே கொரோனா பரவியதாக ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இதனை பா.ஜ.க மறுத்துள்ளது.
Related Tags :
Next Story