இந்த வாரம் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டிவிடும் - ராகுல்காந்தி கருத்து
இந்த வாரம் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டிவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று இந்த 7 மாதங்களில் உலக நாடுகளையெல்லாம் தன் பிடியில் ஆட்டுவித்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘’கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்த வாரம் 10 லட்சத்தை தாண்டிவிடும்‘’ என்று கூறியுள்ளார்.
மேலும், அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், கொரோனா சூழ்நிலை மிக மோசமாகி விடும் என்ற உலக சுகாதார நிறுவன தலைவரின் கருத்து இடம்பெற்ற பத்திரிகை செய்தியையும் அவர் இணைத்துள்ளார்.
Related Tags :
Next Story