கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது
கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 29, 429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது.
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 20,572 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் பாதிப்பு 29, 429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது.
பாதிப்பு எண்ணிக்கை 9,06,752 லிருந்து 9,36,181 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,727 லிருந்து 24,309 ஆக உயர்ந்து உள்ளது. 24 மணி நேரத்தில் 582 பேர் உயிரிழந்து உள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 5,71,460 லிருந்து 5,92,032 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story