கோவாவில் கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் ஆகஸ்டு 10ந்தேதி வரை பொது ஊரடங்கு அமல்


கோவாவில் கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் ஆகஸ்டு 10ந்தேதி வரை பொது ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 15 July 2020 10:29 AM GMT (Updated: 15 July 2020 10:29 AM GMT)

கோவாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இன்று முதல் வரும் ஆகஸ்டு 10ந்தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவு அமலாகிறது.

பனாஜி,

கோவாவில் கொரோனா பாதிப்புகளுக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.  1,607 பேர் குணமடைந்து உள்ளனர்.  1,128 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  மொத்தம் 2,753 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கோவாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், முதல் மந்திரி பிரமோத் சாவந்த், இன்று முதல் வரும் ஆகஸ்டு 10ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி, இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.  இதேபோன்று இந்த வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஆகிய 3 நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.  மருத்துவ சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.  இதனால், இன்றிரவு 8 மணி முதல் கோவாவில் பொது ஊரடங்கு உத்தரவு அமலாகிறது.

Next Story