வரும் 17-ஆம் தேதி லடாக் செல்கிறார் ராஜ்நாத்சிங்


வரும் 17-ஆம் தேதி லடாக் செல்கிறார் ராஜ்நாத்சிங்
x
தினத்தந்தி 15 July 2020 10:37 AM GMT (Updated: 2020-07-15T16:07:38+05:30)

வரும் 17-ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

இரண்டு நாட்கள் பயணமாக லடாக், ஸ்ரீநகர் பகுதிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் செல்கிறார். லடாக்கிற்கு 17-ஆம் தேதியும் ஸ்ரீநகர் பகுதிக்கு 18- ஆம் தேதியும் ராஜ்நாத்சிங் செல்கிறார். ராஜ்நாத்சிங்குடன் ராணுவ தளபதியும் உடன் செல்கிறார்.

லடாக் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத்சிங் ஆய்வு செய்கிறார்.  லடாக் எல்லையில் சீனாவுடனான மோதல் ஏற்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story