தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ள நீரால் நோய் பரவும் ஆபத்து
தெலுங்கானாவில் உஸ்மானியா அரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ள நீரால் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உஸ்மானியா அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நாட்டின் மிக பழமை வாய்ந்த மருத்துவமனைகளில் ஒன்றான இதில், உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் உள்ளிட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதேபோன்று கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வரும் வார்டில், இன்று பெய்த கனமழையால் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
இதனால், நோயாளிகளுடன் இருப்பதில் உறவினர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டு உள்ளது.
இந்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுடன், சிகிச்சை பெறும் நோயாளிகளும் பல மணிநேரம் ஒன்றாக இருந்தது நேற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மருத்துவமனைக்குள் வெள்ள நீர் தேங்கி கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story