கர்நாடகாவில் இதுவரை இல்லாதபுதிய உச்சம்: மேலும் 3,176 பேருக்கு கொரோனா தொற்று


கர்நாடகாவில் இதுவரை இல்லாதபுதிய உச்சம்: மேலும் 3,176 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 15 July 2020 10:26 PM IST (Updated: 15 July 2020 10:26 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இதுவரை இல்லாதபுதிய உச்சமாக இன்று மேலும் 3,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கொரோனா தாக்கி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 3,176  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 47,253 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் மேலும் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 928 ஆக உயந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 1,076 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,446 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 27,853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகாவில் கொரொனா பாதிப்பும், பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Next Story