இந்தியா-சீனா ராணுவம் இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை


இந்தியா-சீனா ராணுவம் இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 16 July 2020 2:30 AM IST (Updated: 16 July 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா-சீனா ராணுவம் இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.

புதுடெல்லி, 

இந்தியா-சீனா ராணுவங்கள் இடையே கடந்த மே 5-ந் தேதி கிழக்கு லடாக் பிராந்தியத்தில் மோதல் ஏற்பட்டது. பதற்றத்தை தணிக்க இருதரப்புக்கும் இடையே பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

இந்நிலையில், ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான 4-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் தொடங்கியது. எல்லைக்கோடு அருகே இந்திய பகுதியான சுசுல் பகுதியில் நடந்தது. இந்திய குழுவுக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர்சிங் தலைமை தாங்கினார். சீன குழுவுக்கு லியு லின் தலைமை தாங்கினார். தொடர்ந்து 15 மணி நேரமாக நீடித்த பேச்சுவார்த்தை, நேற்று அதிகாலை 2 மணியளவில் முடிவடைந்தது. 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் இதுவே நீண்ட நேரம் நடந்துள்ளது.

பேச்சுவார்த்தை விவரங்களை இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனேவிடம் இந்திய குழு தெரிவித்தது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங் கூறியதாவது:-

முந்தைய 3 சுற்று பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட கருத்தொற்றுமை அடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்தது. பதற்றத்தை தணிக்க, மேற்கொண்டு படைகளை விலக்கிக் கொள்வதில் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியை நிலைநாட்ட சீனாவுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story