தேசிய செய்திகள்

அசாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு; 48 லட்சம் பேர் பாதிப்பு + "||" + Assam floods: Death toll rises to 68; 48 lakh people affected

அசாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு; 48 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் வெள்ளம்:  பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு; 48 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வடைந்துள்ளது.
கவுகாத்தி,

அசாமில் பருவமழை காலம் தொடங்கிய பின்னர் பெய்த தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  இதனால் அசாமில் 30 மாவட்டங்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளன.  வெள்ள நீரானது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.  மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தஞ்சம் தேடி வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதுபற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அசாமில் கடந்த மே 22ந்தேதி முதல் ஜூலை 15ந்தேதி வரை வெள்ள பாதிப்புக்கு 68 பேர் பலியாகி உள்ளனர். 4,766 கிராமங்களில் வசிக்கும் மக்கள் உள்பட 48 லட்சத்து 7 ஆயிரத்து 111 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக 487 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 567 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.  இதேபோன்று கால்நடைகளுக்கான தீவனங்களும் வழங்கப்பட்டு உள்ளன.  தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுதப்படை போலீஸ்காரர்கள் உள்பட 106 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்தது
வேலூர் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் உள்பட 106 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்துள்ளது.
2. சேலம் மாவட்டத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர் வரகனேரி அருகே பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு
திருச்சி வரகனேரி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அதை சீரமைக்க கோரி பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. சேலத்தில் ஒரே நாளில் 286 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது 5 பேர் பலி
சேலத்தில் நேற்று ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது. மேலும் 5 பேர் பலியானார்கள்.
5. நாமக்கல் மாவட்டத்தில் வங்கி மேலாளர் உள்பட 98 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் உள்பட 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,998 ஆக உயர்ந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...