தேசிய செய்திகள்

மராட்டிய முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு + "||" + Former Maharashtra CM Shivajirao Patil has tested positive for corona

மராட்டிய முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

மராட்டிய முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
மராட்டிய முன்னாள் முதல் மந்திரி சிவாஜி ராவ் பாட்டீல் நிலாங்கேக்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புனே,

மராட்டியத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சிவாஜி ராவ் பாட்டீல் நிலாங்கேக்கர் (வயது 88).  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 1985ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை முதல் மந்திரியாக இருந்துள்ளார்.

அவரது மகளின் மருத்துவ தேர்வு மதிப்பெண்களில் திருத்தம் செய்த முறைகேட்டு வழக்கில் மும்பை ஐகோர்ட்டு அவருக்கு கண்டனம் தெரிவித்தது.  இதனை தொடர்ந்து அவர் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், மராட்டியத்தின் லத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவர் புனேவிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 4 நாட்களுக்கு பின் குறைந்த பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 871 பேர் பலியாகி உள்ளனர்.
2. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
4. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் உள்பட 743 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் உள்பட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
கொரோனா பாதிப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குணமடைந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.