கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட்
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
திருவனந்தபுரம்,
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்படுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்டதில், ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேசுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால், சிவசங்கருக்கும் இதில் தொடர்பு இருக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தலைமைச்செயலாளர் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் பினராயி விஜயன் அமைத்தார். இந்தக் குழு அளித்த அறிக்கையின் படி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். சிவசங்கர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெறும் எனவும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Related Tags :
Next Story