மும்பையில் கனமழையால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து ; 3 பேர் பலி, 7 பேர் காயம்


மும்பையில் கனமழையால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து ; 3 பேர் பலி, 7 பேர் காயம்
x
தினத்தந்தி 16 July 2020 3:34 PM GMT (Updated: 2020-07-16T21:04:33+05:30)

மும்பையில் கனமழையால் இருவேறு இடங்களில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. கனமழை காரணமாக மும்பையில் இருவேறு இடங்களில் கட்டிடங்கள்  இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

மலாட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில்,  ஒருவர் பலியானார்.  ஐந்து பேர் காயம் அடைந்தனர். நிகழ்விடத்தில் மீட்பு படையினர்  கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 மும்பையில் போர்ட் பகுதியில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


Next Story