ஜம்மு காஷ்மீரில் 4ஜி சேவை வழங்கும் விவகாரம் - ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு


ஜம்மு காஷ்மீரில் 4ஜி சேவை வழங்கும் விவகாரம் - ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 16 July 2020 10:03 PM IST (Updated: 16 July 2020 10:03 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீருக்கு 4ஜி வழங்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசு, ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


காஷ்மீருக்கு 4ஜி வழங்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசு, ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில், கல்வி மற்றும் மருத்துவ தேவைக்காக 4ஜி சேவை வழங்க உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து, ஆய்வு செய்து முடிவெடுக்க உயர் நிலை குழு அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், எந்தக் குழுவையும் மத்திய அரசு அமைக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை, விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா அமர்வில், உயர் நிலைக்குழு அமைத்து, 4ஜி சேவை வழங்க முடியாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதை பொது தளத்தில் அறிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நடவடிக்கைகள் குறித்து ஒருவாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். 

Next Story