கர்நாடகாவில் கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம்: இன்று மேலும் 104 பேர் பலி
கர்நாடகாவில் இன்று மேலும் மேலும் 104 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று கர்நாடகாவில் மேலும் 4,169 பேருக்கு கொரோனா தொற்று இருப்ப்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 51,422 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 104 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 1032 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19,729 ஆக உள்ளது. தற்போது வரை 30,655 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story