மும்பையில் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

மும்பையில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ள சூழலில்
மலாட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், ஒருவர் பலியானார். ஐந்து பேர் காயம் அடைந்தனர். சம்பவ பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் இன்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மும்பையில் துறைமுக பகுதியில் உள்ள பானுஷாலி என்ற கட்டிடம் நேற்று கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் இருந்த பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து, மீட்பு குழுவினர் மீட்பு பணியை இன்று தொடர்ந்தனர். இதில், பானுஷாலி கட்டிட விபத்தில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story