கோவேக்சின் பரிசோதனை தொடங்கியது; பக்க விளைவுகள் ஏற்படவில்லை: அரியானா சுகாதாரத்துறை மந்திரி
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளது.
சண்டிகார்,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமானது, கொரோனாவைத் தடுக்கும் மருந்தைக் கண்டறிவதில் இறுதி நிலையை எட்டியுள்ளது. மனிதா்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அரியானாவின் ரோடக் பிஜிஐ மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் செலுத்தும் மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டு விட்டதாக அரியானா சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனில் விஜ் கூறுகையில், “ 3 பேரிடம் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தடுப்பு மருந்துக்க அவர்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை” என்றார்.
Related Tags :
Next Story