ஆந்திர பிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் 2,739 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு


ஆந்திர பிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் 2,739 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
x
தினத்தந்தி 17 July 2020 12:37 PM GMT (Updated: 2020-07-17T18:07:21+05:30)

ஆந்திர பிரதேசத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்த 2,739 பேர் கடந்த 3 நாட்களில் மீட்கப்பட்டு உள்ளனர்.

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுப்பதற்காக ஆபரேசன் முஸ்கான் என்ற பெயரிலான திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது.  இதுபற்றி டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ள செய்தியில், இந்த திட்டத்தின்படி, மாநில சி.ஐ.டி. பிரிவானது, குழந்தை தொழிலாளர்கள், சாலைகள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்களில் அனாதைகளாக சுற்றி திரிபவர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களை கண்டறியும் பணியில் ஈடுபடும்.

இந்த திட்டம், ஆபரேசன் முஸ்கான் கோவிட்19 என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, மீட்கப்பட்ட குழந்தைகள் அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படும் என தெரிவித்து உள்ளது.

கடந்த 14ந்தேதி தொடங்கிய இந்த திட்டத்தில், கடந்த 3 நாட்களில் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதுவரை 2,739 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளன.  இந்த திட்டம் தொடர்ந்து வரும் 20ந்தேதி வரை செயல்படுத்தப்படும்.  மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.  இவர்களில் 2,560 பேர் தங்களுடைய பெற்றோரிடம் சென்று சேர்ந்துள்ளனர்.

Next Story