இந்தியாவின் சுகாதார முறைகள் பிற நாடுகளில் உள்ளதை விட சிறப்பாக உள்ளது: ஐநாவில் பிரதமர் மோடி உரை
இந்தியாவின் சுகாதார முறைகள் பிற நாடுகளில் உள்ளதை விட சிறப்பாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் இந்த ஆண்டிற்கான உயர்மட்டக் குழு நடைபெற்று வருகிறது.
ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் இந்த ஆண்டிற்கான உயர்மட்டக் குழு நடைபெற்று வருகிறது.
ஐ.நா. வின் பாதுகாப்புக் கவுன்சிலில் 2021-22 காலங்களுக்கு நிரந்தரமற்ற உறுப்பினராக பெருவாரியான ஆதரவுடன் ஜூன்17 அன்று இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஐ.நா. சபையின் பெருவாரியான உறுப்பினர்களிடையே பிரதமர் மோடி காணொலி வழியாக முதல் முறையாக இன்று உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
*சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதால் குணம் அடையும் நோயாளிகள் எண்ணிக்கை விகிதம் அதிகமாக உள்ளது
*இந்தியாவில் சுகாதார முறைகள் பிற உலக நாடுகளை விட சிறப்பாக உள்ளது.
*6 ஆண்டுகளில் 40 கோடி வங்கி கணக்குகள் தொடங்கி வைத்துள்ளோம்.
*குடிமக்கள் அனைவருக்கும் வீடு கட்டி தரும் திட்டத்தை நிறைவேற்றுவதை உறுதி பூண்டுள்ளோம்.
*நெகிழி பயன்பாட்டை குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
*அமைதி மற்றும் நிலையான வளர்ச்சி பாதை மீது இந்தியா மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

*கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறோம்.
*கொரோனாவில் இருந்து விரைவாக மீளும் நாடாக இந்தியா உள்ளது.
*கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெரிய அளவில் பாதித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story