கொரோனாவுக்கு எதிரான போரில் 150 நாடுகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கினோம்; பிரதமர் மோடி பேச்சு
கொரோனாவுக்கு எதிரான போரில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவம் மற்றும் பிற உதவிகளை வழங்கினோம் என பிரதமர் மோடி பெருமிதமுடன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வழியே இன்று பேசினார். அவர் கூறும்பொழுது, கொரோனா வைரசுக்கு எதிராக கூட்டாக நாம் நடத்தும் போரில், 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவம் மற்றும் பிற உதவிகளை நாம் வழங்கியுள்ளோம்.
ஐ.நா. சபை 193 உறுப்பு நாடுகளை இன்று ஒன்றிணைத்துள்ளது. உறுப்பினர் எண்ணிக்கையுடன், அந்த அமைப்பிடம் இருந்து எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. தொடக்கத்தில் இருந்தே, ஐ.நா.வின் வளர்ச்சிக்கான பணிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.
ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் முதல் தலைவர் ஓர் இந்தியர். இந்த கவுன்சிலின் செயல் திட்ட வடிவமைப்பில் இந்தியாவும் பங்கு கொண்டுள்ளது. உள்நாட்டு முயற்சிகளின் வழியே, 2030ம் ஆண்டுக்கான செயல் திட்டம் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் மீண்டும் நாம் சிறந்த பங்காற்றி வருகிறோம். வளர்ந்து வரும் பிற நாடுகளின் தொடர்ச்சியான வளர்ச்சி இலக்குகளுக்கும் நாம் ஆதரவு அளித்து வருகிறோம் என கூறினார்.
Related Tags :
Next Story