உத்தர காண்டில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு: மாநில அரசு அறிவிப்பு


உத்தர காண்டில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு:  மாநில அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 17 July 2020 10:12 PM IST (Updated: 17 July 2020 10:12 PM IST)
t-max-icont-min-icon

உத்தர காண்டில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாமாநில அரசு அறிவித்துள்ளது.


உத்தரகாண்ட் மாநிலத்தில் படிப்படியாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபடியாக உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார்.

அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அமலாகும் எனவும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.  உத்தரகாண்டில் இன்று 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,102 ஆக உள்ளது. 

Next Story