கர்நாடகாவில் கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம்: மேலும் 115 பேர் பலி


கர்நாடகாவில் கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம்: மேலும் 115 பேர் பலி
x
தினத்தந்தி 17 July 2020 10:24 PM IST (Updated: 17 July 2020 10:24 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் கொரோனா தொற்றால் மேலும் 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் புதிய உச்சத்தையே தொட்டு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று கர்நாடகாவில் மேலும் 3,693 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 55,115 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரேநாளில் மாநிலத்தில் புதிய உச்சமாக மேலும் 115 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,147 ஆக உய்ர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 1,028 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,757 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 33,205 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story