1200 கி.மீ பயணம் செய்து பாகிஸ்தான் காதலியை சந்திக்க சென்ற இந்திய இளைஞர் எல்லையில் பிடிபட்டார்
பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை தேடி இந்திய எல்லையை மீற முயன்ற 20 வயது இளைஞரை எல்லை பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
அகமதாபாத்:
அமிதாபச்சனின் மகன் அபிஷேக் பச்சனின் முதல் படம் ‘அகதிகள்’ அதில் அவர் பாகிஸ்தான் பெண்ணான கரீனா கபூர் கானை காதலிப்பார் அதற்காக அவர் குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் எல்லைகடக்க முயல்வார்.
தற்போது இந்த சினிமா கதை நிஜமாகி உள்ளது...
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 1.5 கிலோமீட்டர் தொலைவில், 20 வயது இளைஞன் ஒருவர் இந்திய எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் செல்ல முயன்றதை தொடர்ந்து அவரை பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியத்தில் தன் காதலியை சந்திக்க பாகிஸ்தான் செல்வதாக கூறி உள்ளார்.
சித்திக் முகமது ஜிஷன் என அடையாளம் காணப்பட்ட இந்த இளைஞர், கட்ச் மாவட்டத்தில் தோலவீரா அருகே மிகவும் சோர்வான காணப்பட்டார்.
சித்திக் பேஸ்புக்கில் சந்தித்த தனது காதலியை சந்திக்க கூகுள் மேப் உதவியுடன் ரான் ஆஃப் கட்ச் கடக்க எல்லையை அடைந்து பாகிஸ்தானுக்கு செல்ல முயற்சித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சித்திக் மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஷா பைசல் நகரில் வசிக்கும் சம்ரா என்ற பெண் நட்பாகி உள்ளார். பின்னர் அது காதலாக மாறி உள்ளது, சித்திக் தந்து காதலியை சந்திக்கும்நம்பிக்கையில் கிட்டத்தட்ட 1,200 கிலோமீட்டர் பயணம் செய்து இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை அடைந்து உள்ளார். அங்கு அவரை எல்லை பாதுகாப்பௌ படை வீரர்கள அவரை பிடித்து உள்ளனர்.
2012-ம் ஆண்டு இதேபோன்று ஒரு வாலிபர் பாகிஸ்தானுக்கு எல்லையை கடந்து சென்றுள்ளார். பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஆறு வருடங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். இந்திய எல்லையை கடந்திருந்தால் இவருக்கும் அது நிலை ஏற்பட்டிருக்கும்.
Related Tags :
Next Story