கோவில் கட்டுவதன் மூலம் கொரோனாவை ஒழிக்க முடியும் சிலர் கருதுகின்றனர்: சரத் பவார் தாக்கு


கோவில் கட்டுவதன் மூலம் கொரோனாவை ஒழிக்க முடியும் சிலர் கருதுகின்றனர்: சரத் பவார் தாக்கு
x
தினத்தந்தி 19 July 2020 10:07 PM IST (Updated: 19 July 2020 10:07 PM IST)
t-max-icont-min-icon

கோவில் கட்டுவதன் மூலம் கொரோனாவை ஒழிக்க முடியும் சிலர் கருதுகின்றனர் என்று சரத் பவார் விமர்சனம் செய்துள்ளார்.

மும்பை,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 3 அல்லது 5 ஆம் தேதி நடைபெறும். இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள  ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம்  சோலாப்பூரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சரத் பவாரிடம்  இது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த சரத் பவார்,  “ கொரோனாவை அழிப்பதுதான் மராட்டிய அரசின் முதன்மை பனியாகும். ஆனால், கோவில் கட்டுவதன் மூலம் கொரோனாவை ஒழித்து விடலாம் என சிலர் கருதுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கிப்போன பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றுவதுவதில் தான் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.


Next Story