ஆமையை வைத்து பூஜை நடத்திய அர்ச்சகர்கள்... கொரோனாவில் இருந்து மீண்டெழுவோம் என நம்பிக்கை


ஆமையை வைத்து  பூஜை நடத்திய அர்ச்சகர்கள்... கொரோனாவில் இருந்து மீண்டெழுவோம் என நம்பிக்கை
x
தினத்தந்தி 20 July 2020 6:58 AM IST (Updated: 20 July 2020 6:58 AM IST)
t-max-icont-min-icon

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சில்கூர் பெருமாள் ஆலயத்திற்குள் புகுந்த ஆமைக்கு, அங்கிருந்த அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஐதராபாத்

தெலங்கானாவின் ஐதராபாத் புகழ்பெற்ற சில்கூர் பெருமாள் ஆலயத்தின் சிவன் சன்னதியில், ஆமை ஒன்று காணப்பட்டது.

இதனையடுத்து ஆமையை பிடித்து அதற்கு பூஜைகள் நடத்திய அர்ச்சகர்கள், விஷ்ணுபுராணத்தின் தசாவதாரத்தில், மகாவிஷ்ணுவின் அவதாரமான கூர்மம் என்று கருதப்படும் ஆமை, சிவன் சன்னதிக்கு வந்திருப்பதால், விரைவில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மனிதகுலம் மீண்டெழும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story