இந்தியாவில் இதுவரை 1.40 கோடி கொரோனா மாதிரி பரிசோதனைகள்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,18,043 ஆக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி
உலகம் முழுவதும் 1 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரத்து 349 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 6 லட்சத்து 8 ஆயிரத்து 856 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 87 லட்சத்து 34 ஆயிரத்து 789 பேர் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 10,77,618 லிருந்து 11,18,043 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,53,751 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,497 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 40,425 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 681பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 1,40,47,908 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 2,56,039 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story