பஞ்சாபில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
சண்டிகர்,
பஞ்சாபில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பஞ்சாபின் 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவற்றில் லூதியானா அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கூடுதலாக சென்றுள்ளது. 254 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநில மந்திரி திரிபித் ராஜேந்தர்சிங் பஜ்வாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் அவரது மனைவி, மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதற்கிடையே பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
பதேகார் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திரிபித் ராஜீந்தர் சிங், பக்வாரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பல்வீந்தர் சிங் டாலிவால் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில், டான்தரன் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தரம்பீர் அக்னிஹோத்ரி என்பவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், பஞ்சாபில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று பா.ஜ.க. பொருளாளர் குருதேவ் சர்மா தேவிக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
Related Tags :
Next Story