கடற்படையின் திறனை மேலும் பலப்படுத்த 4 பி-எய்ட்ஐ மல்ட்டி மிஷன் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்


கடற்படையின் திறனை மேலும் பலப்படுத்த 4 பி-எய்ட்ஐ மல்ட்டி மிஷன் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்
x
தினத்தந்தி 21 July 2020 1:08 PM IST (Updated: 21 July 2020 1:08 PM IST)
t-max-icont-min-icon

கடற்படையின் திறனை மேலும் பலப்படுத்தும் வகையில் நான்கு பி-எய்ட்ஐ மல்ட்டி மிஷன் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா முடிவு செய்துள்ளது.

சென்னை

இந்திய பெருங்கடலில், கடற்படையின் திறனை மேலும் பலப்படுத்தும் வகையில் நான்கு பி-எய்ட் ஐமல்ட்டி மிஷன் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து அடுத்த ஆண்டு வாங்க இந்தியாமுடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு இறுதியில் போயிங் நிறுவனத்திடம் இருந்து இதே போன்ற மேலும் 6 விமானங்களை வாங்கவும் முயற்சி எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்திய கடற்படையிடம் இப்போது பி 8ஏ போஸிடான்
விமானங்களின் மேம்பட்ட வடிவமான பி-எய்ட் ஐ விமானங்கள், கடல் ரோந்து பணிகளுக்கு என்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

எதிரியின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அவற்றின் மீது ஏவுகணைகளை வீசுவதற்கான தொழில்நுட்பம் இந்த விமானங்களில் உள்ளது. தென் சீன கடலில் சீனாவின் ராணுவ ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கில் இந்த விமானங்களை இந்தியா வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மியான்மர், இலங்கை,பாகிஸ்தான், ஈரான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பல துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள சீனா, இந்திய கடற்படை மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் கடற்படையையும் கட்டுப்படுத்த திட்டமிடும் நிலையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந் இந்த விமான கொள்முதலை இந்தியா நடத்த உள்ளது.


Next Story