கர்நாடகாவில் ஒரே நாளில் 3,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


கர்நாடகாவில் ஒரே நாளில் 3,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 21 July 2020 9:16 PM IST (Updated: 21 July 2020 9:16 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் ஒரே நாளில் 3,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 3,648 பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகினர்.  72 பேர் பலியானார்கள்.  இதனால் பலி எண்ணிக்கை 1,403 ஆக உயர்ந்தது.  23,795 பேர் குணமடைந்தனர்.  42,222 பேர் தொடர் சிகிச்சையில் இருந்தனர்.

கர்நாடகாவின் பெங்களூருவில் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் இருந்தன.  நேற்று ஒரு நாளில் 1,452 பேர் பாதிக்கப்பட்டும், 31 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என கர்நாடக சுகாதார துறை தெரிவித்திருந்தது.

கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு இருக்காது என முதல் மந்திரி எடியூரப்பா செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.  கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மட்டுமே இனி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 3,649 பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  இது நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட ஒன்று அதிகம் ஆகும்.  61 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 1,403ல் இருந்து 1,464 ஆக உயர்ந்து உள்ளது.  இதேபோன்று 1,664 பேர் குணமடைந்து உள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 25,459 ஆக உயர்ந்து உள்ளது.  44,140 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என கர்நாடக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Next Story