அடுத்த வருடம் மம்தா பானர்ஜி பதவி ஏற்கமாட்டார்; மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் பேட்டி


அடுத்த வருடம் மம்தா பானர்ஜி பதவி ஏற்கமாட்டார்; மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 21 July 2020 9:41 PM IST (Updated: 21 July 2020 9:41 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த வருடம் மம்தா பானர்ஜி பதவி ஏற்கமாட்டார் என மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் பேட்டியில் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூட்டமொன்றில் இன்று பேசும்பொழுது, வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை மாநிலத்தில் இருந்தே தூக்கி எறிவோம்.  திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்.  அடுத்த தேர்தல் மாநிலம் மட்டுமின்றி நாட்டுக்கே ஒரு புதிய வழியை காட்டும் வகையில் இருக்கும் என கூறினார்.

இதுபற்றி மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இன்று சர்க்கஸ் காட்சி ஒன்று நடந்தது.  முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் இன்றைய 95 சதவீத பேச்சுகள் பா.ஜ.க.வை பற்றியே இருந்தது.  இது, அவர் பா.ஜ.க.வை கண்டு அச்சமடைந்து உள்ளார் என காட்டுகிறது.

வேறு கட்சிகளில் இருந்து திரிணாமுல் காங்கிரசுக்கு வரும்படி அவர் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.  ஏனெனில் ஒருவரும் அவரது கட்சியில் சேரவில்லை.  எனது வார்த்தைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.  அடுத்த வருடம் மம்தா பானர்ஜி பதவி ஏற்கமாட்டார் என கூறியுள்ளார்.

Next Story