வெள்ளத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணி பெண்: மரக்கட்டை, டயர்களால் ஆன படகில் மீட்ட மக்கள்


வெள்ளத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணி பெண்: மரக்கட்டை, டயர்களால் ஆன படகில் மீட்ட மக்கள்
x
தினத்தந்தி 21 July 2020 10:56 PM IST (Updated: 21 July 2020 10:56 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் வெள்ளத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணி பெண்ணை மரக்கட்டை, டயர்களால் ஆன படகில் சென்று மக்கள் மீட்டனர்.


பாட்னா,

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீகாரின் பல  ஆறுகளில்  பெரும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கழுத்தளவு தண்ணீரில் மரக்கட்டைகள் மற்றும் டயர் டியூப்களால் செய்த படகின் மூலமாக அப்பகுதி மக்கள் மீட்டு அழைத்து வந்தனர். அம்மாவட்ட நீதிமன்ற அலுவலகத்துக்கு இந்த தகவல் தெரிந்ததும், அவர்கள் பேரிடர் மீட்புப்படையின் படகு மூலமாக மீட்டு அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

வெள்ளத்தில் கழுத்தளவு தண்ணீரில் சிக்கிய கர்ப்பிணிப்பெண்ணை பிரசவத்துக்காக மரக்கட்டை மற்றும் டயரால் செய்யப்பட்ட படகில் மீட்ட புகைப்படங்கள் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

பீகார் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மிக மோசமான மாவட்டங்களில் தர்பங்காவும் ஒன்றாகும். இதுபோலவே தெங்கா, முசாபர் நகர், ஹயாகட், சிதாமர்கி போன்ற மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார், அசாம் மாநிலங்கள் வெள்ளம் மற்றும் கோவிட் -19 இரட்டைப் பேரழிவுகளை எதிர்த்துப் போராடுகின்றன.


Next Story