காக்ராபர் 3-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்- பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து


காக்ராபர் 3-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்- பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 22 July 2020 2:26 PM IST (Updated: 22 July 2020 2:26 PM IST)
t-max-icont-min-icon

காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அணு மின் உற்பத்தி தொடக்கம் பிரதமர் நரேந்திர மோடி இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அணு மின் உற்பத்தி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், “காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில், அணு மின் உற்பத்தி தொடங்கப்பட்டதற்கு இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்!

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 700 மெகா வாட் காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையானது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் ஔிரும் உதாரணமாகத் திகழ்கிறது. இது.

வருங்காலத்தில் இது போன்ற பல சாதனைகள் நிகழ்த்துவதற்கு ஒரு வழிகாட்டுதலாக விளங்கும்’’ என்று கூறியுள்ளார்.



Next Story