அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி; திட்டமிட்டதை விட 20 அடி உயரம் அதிகரிக்க உள்ளதாக தகவல்
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் உயரத்தை கடந்த 1988 ஆம் ஆண்டு திட்டமிட்டதை விட, 20 அடி அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகாவத் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவிலின் உயரம், கடந்த 1988 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட 141 அடியில் இருந்து 161 அடியாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக, அயோத்தி ராமர் கோவிலின் முதன்மை வடிவமைப்பாளரான சோம்புராவின் மகனான, நிகில் சோம்புரா தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story