கொரோனா தொற்றுக்கு எதிரான பேபிபுளூ மாத்திரை 3-வது கட்ட பரிசோதனைகளில் வெற்றி
கொரோனா தொற்றுக்கு எதிரான தயாரான மாத்திரை 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளில் சிறப்பான முடிவுகளை காட்டுகிறது,
புதுடெல்லி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,129 இறப்புகள் அதிகரித்துள்ளன, இதனால் ஒட்டுமொத்த பாதிப்புகள் 12 லட்சத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
ஆனால் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பிற நோய்களுக்கான சிகிச்சையில் தற்போது தரப்படுகிற சில மருந்துகள் சோதனை அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு தரப்படுகின்றன.
இந்த நிலையில், பிரபல மருந்து நிறுவனமான கிளென்மார்க் நிறுவனத்தார், வைரஸ் தொற்றுக்கு எதிராக பேபிபுளூ என்ற மாத்திரையை தயாரித்து வினியோகம் செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.
இந்த பேபிபுளூ (fabiflu)என்ற மருந்து சோதனை அடிப்படையில் 150 கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது. வழக்கமான மருந்துகள், சிகிச்சைகளை விட கிளென்மார்க் நிறுவன மருந்து நல்ல பலன் தருவதாகவும், முதல் இரண்டு கட்ட பரிசோதனை வெற்றி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், 3ஆம் கட்ட சோதனை முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூன் 20ஆம் தேதி கிளென்மார்க் நிறுவனம் தங்கள் மருந்தை சோதனை அடிப்படையில் தன்னார்வலர்களுக்கு அளித்தது.
வைரஸ் தடுப்பு மருந்து பேபிபுளூ 3 வது கட்ட மருத்துவ பரிசோதனையில் லேசான மற்றும் மிதமாக கொரோனா வைரஸ் நோயாளிகள் முன்னேற்றம் கண்டதாகக் கூறி உள்ளது.
ஜூன் 20 அன்று, பேபிபுளூவுக்கான இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரிடமிருந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஒப்புதலைப் பெற்றதாகக் கூறியது, இது மிதமான மற்றும் மிதமான கொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் வாய்வழி அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தாகும். இந்தியாவில் கொரோனா பரவுவதன் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, விரைவான ஒப்புதல் செயல்முறையின் ஒரு பகுதியாக உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஒப்புதல் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story