கேரள தங்கக் கடத்தல் கும்பலுடன் கேரள அமைச்சர்களின் 8 தனி உதவியாளர்களுக்கு தொடர்பு...!!


கேரள தங்கக் கடத்தல் கும்பலுடன் கேரள அமைச்சர்களின் 8 தனி உதவியாளர்களுக்கு தொடர்பு...!!
x
தினத்தந்தி 23 July 2020 1:41 PM IST (Updated: 23 July 2020 1:41 PM IST)
t-max-icont-min-icon

கேரள தங்கக் கடத்தல் கும்பலுடன் கேரள அமைச்சர்களின் 8 தனி உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்: 

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  என்ஐஏ விசாரணை ஒருபுறமிருக்க, தங்க கடத்தலில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அதன் துணைத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட தூதரக பார்சலை  பயன்படுத்தி தங்கம் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பைசல் ஃபரீத் கடந்த வாரம் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஸ்வப்னா கூட்டாளிகளின் செல்போன் ,லேப்டாப்பில் பதிவான விவரங்களை அறிய என்.ஐ.ஏ.தீவிரம் காட்டி வருகிறது. அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

தங்கக் கடத்தல் கும்பலுடன் கேரள அமைச்சர்களின் 8 தனி உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story