கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு 97 பேர் பலி
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 97 பேர் பலியாகி உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வந்தன. கடந்த 20ந்தேதி ஒரே நாளில் 3,648 பேருக்கும், 21ந்தேதி 3,649 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன.
கர்நாடகாவில் 22ந்தேதி முதல் ஊரடங்கு இருக்காது என முதல் மந்திரி எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறினார். கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மட்டுமே இனி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த நிலையில், கர்நாடக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,030 பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 2,207 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள். குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்திற்கு மேற்பட்டும், தொடர் சிகிச்சையில் 47 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
இதுவரை 97 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,616 ஆக உயர்ந்து உள்ளது. கர்நாடகாவில் ஊரடங்கு இருக்காது என முதல் மந்திரி அறிவித்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story