கொரோனா மருந்தை அதிக விலைக்கு விற்ற பெண் மீது வழக்குப்பதிவு


கொரோனா மருந்தை அதிக விலைக்கு விற்ற பெண் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 25 July 2020 7:57 AM IST (Updated: 25 July 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

தானே அருகே உல்லாஸ்நகரில் கொரோனா மருந்தை அதிக விலைக்கு விற்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மும்பை,

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியில் பெண் ஒருவர் கொரோனா மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் மருந்தை அதிக விலைக்கு விற்றதாக கூறப்பட்ட நிதா பஞ்வானி என்ற பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பெண் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊசி மருந்தை அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

அவர் ரூ.40 ஆயிரத்து 545 மதிப்பிலான நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை ரூ.60 ஆயிரத்துக்கு மருந்து சீட்டு இன்றி விற்பனை செய்து உள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அந்த பெண் மீது அதிக விலைக்கு மருந்தை விற்றதாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story