தாராவியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று
மும்பை தாராவியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1 ந் தேதி நுழைந்த கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. மக்கள் நெருக்கம் மிகுந்த இடம் என்பதால், தாராவியில் கொரோனா தொற்று பரவல் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. எனினும், மராட்டிய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் தாராவியில் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தாராவியில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியிருந்தது. கொரோனா பரவல் கணிசமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், தாராவி பகுதியில் ஆங்காங்கே சில இடங்களில் புதிதாக தொற்று பதிவாகி வருகிறது
அங்கு இன்று புதிதாக 10 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,529 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 2,155 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதால், 124 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story