கார்கில் போர் 21 வது நினைவு தினம்: இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள் - ராஜ்நாத் சிங் புகழாரம்


கார்கில் போர் 21 வது நினைவு தினம்: இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள் -  ராஜ்நாத் சிங் புகழாரம்
x
தினத்தந்தி 26 July 2020 11:46 AM IST (Updated: 26 July 2020 11:46 AM IST)
t-max-icont-min-icon

கார்கில் வெற்றி நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள் என பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுடெல்லி,

கார்கில் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் , இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள் என புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,

இந்திய வீரர்களின் துணிச்சலும், தியாகமும் முன்மாதிரியாக போற்றத்தக்கவை என தெரிவித்துள்ளார். நமது நாட்டுக்கு எதிராக எந்த விதமான இடர்கள் வந்தாலும், அதைத் தடுத்து நாட்டைக்காக்கும் திறன் நமது ராணுவத்துக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் போரில்  ஈடுபட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர்,  நமக்கு முன் உள்ள சாவால்களை வென்று காட்டிய சமீபத்திய வரலாறு கார்கில் போர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கார்கில் நமது சுய மரியாதையின் சின்னம் மட்டுமல்ல, அநீதிக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையும் கூட. முன்னாள் பிரதமர் ஏ.பி. வாஜ்பாய் தேசிய பாதுகாப்பின் எல்லைக்குள் நாம் செய்வது தற்காப்புக்காகவே தவிர தாக்குதல் அல்ல என்று கூறியிருந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story