ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் - மாநில ஆளுநருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்
ராஜஸ்தான் மாநில சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிடுவதாக அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, மாநில அரசுகளை கலைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கும் நிலையில், ஆளுநர் சட்டசபையை கூட்டி ஜனநாயகத்தை காக்க வேண்டும் எனவும் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

Related Tags :
Next Story