தேசிய செய்திகள்

ராமர் கோவில் பூமி பூஜை: அரசியல் சாசனத்தை மீறும் செயல் நடந்துள்ளது- சீதாராம் யெச்சூரி விமர்சனம் + "||" + Legitimisation of Babri destruction… official status to one religion: Left on Ram temple ceremony

ராமர் கோவில் பூமி பூஜை: அரசியல் சாசனத்தை மீறும் செயல் நடந்துள்ளது- சீதாராம் யெச்சூரி விமர்சனம்

ராமர் கோவில் பூமி பூஜை: அரசியல் சாசனத்தை மீறும் செயல் நடந்துள்ளது-  சீதாராம் யெச்சூரி விமர்சனம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
புதுடெல்லி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு  அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா மற்றும் பூமிபூஜை சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது அரசியல் சாசனச் சட்டத்தை மீறிய செயல் என்று சிபிஎம் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டரில் சீதாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:- ஆளுநர், முதல்வர் முன்னிலையில் ராமர் கோவில் கட்டுமானத்தை அரசு எடுத்து நடத்துவது அரசியல் அமைப்பை மீறும் செயல் ஆகும்.   உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை அறக்கட்டளையிடம் விட வேண்டும் என்று கூறியிருந்தது.  

பாபர் மசூதி இடிப்பு சட்ட விரோதம் அதைச் செய்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், யாருக்கும் தண்டனை வழங்கப்படும் முன்பே,  ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி விட்டது.. இந்த பூமிபூஜை நிகழ்வு மக்களின் மத உணர்வுகளை நேரடியாகச் சுரண்டும் மலிவான அரசியல் நோக்கம் கொண்டது. அரசியல் சாசனத்தின் எழுத்தையும் உணர்வையும் வெளிப்படையாக மீறும் செயலாகும்”  என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கின்றனர் - பிரதமர் மோடி தாக்கு
வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை சாடியுள்ளார்.
2. பிரதமர் மோடி இன்று 6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி இன்று உத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
3. மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது- ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேச்சு
மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது- ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது பொதுச் சபையில் பிரதமர் மோடி பேசினார்.
4. கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது: பிரதமர் மோடி
கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
5. உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் - பிரதமர் மோடி
உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் என பிரதமர் மோடி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...