"கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும்"- மத்திய அரசு
கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால், வங்கிகள், நிதி நிறுவனங்களில் அவர்கள் வாங்கிய கடனுக்கான மாதாந்திர தவணையை இப்போதைக்கு செலுத்த தேவையில்லை. கடன் கொடுத்த நிறுவனங்களும் இந்த தவணையை கேட்டு மக்களை தொல்லை செய்யக்கூடாது,’ என்று கடந்த மார்ச்சில் மத்திய அரசு சலுகை அளித்தது.
இந்த நிலையில், வங்கிக் கடனை திரும்ப செலுத்துவதற்கான மாதத் தவணையின் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, "கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், வட்டிக்கு வட்டி விதிப்பது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க சிறிது காலம் தேவைப்படுகிறது எனவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது.
Related Tags :
Next Story