கொரோனா பாதித்தவர் உடல்களில் 3 வாரங்களில் எதிர்ப்பு சக்தி வேகம் அதிகரித்து பின் குறைகிறது- ஆய்வில் தகவல்


கொரோனா பாதித்தவர் உடல்களில் 3 வாரங்களில் எதிர்ப்பு சக்தி வேகம் அதிகரித்து பின் குறைகிறது- ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 1 Sep 2020 8:50 AM GMT (Updated: 1 Sep 2020 8:50 AM GMT)

கொரோனா அறிகுறிகளுடன் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் மூன்று வாரங்களில் ஆண்டிபாடியின் வேகம் அதிகரிப்பதும் அதேசமயம் குறைவதையும் கண்டதாகக் கூறியுள்ளனர்.

புதுடெல்லி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் உடலில் உள்ள ஆண்டிபாடீக்கள் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தாங்கக் கூடியதாக இருக்கிறது என ஜே.ஜே மருத்துவமனை குழு ஆய்வில் கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வில் 801 சுகாதார ஊழியர்களைக் கொண்டு தொற்றிலிருந்து மீண்ட 28 பேரை 7 நாட்கள் வைத்து ஆய்வு செய்துள்ளது. அந்த 28 பேரிடமும் இரண்டு மாதங்கள் கழித்து எந்த ஆண்டிபாடீக்களும் தென்படவில்லை என கூறியுள்ளது.

அதன் பிறகு மீண்டும் 34 பேரை பாசிடிவ் என கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் மூன்று வாரங்களில் அவர்களுக்கு 90 சதவீத ஆண்டிபாடீக்கள் இருந்துள்ளன. பின் ஐந்து வாரங்கள் கழித்து 38.5 சதவீத ஆண்டிபாடீக்கள் குறைந்ததாக ஆய்வின் தலைவர் மருத்துவர் நிஷாந்த் குமார் கூறியுள்ளார்.

அதேபோல் ஆண்டிபாடீக்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப விரைவில் குறையலாம் என்கிறது. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் கொரோனா அறிகுறிகளுடன் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் மூன்று வாரங்களில் ஆண்டிபாடியின் வேகம் அதிகரிப்பதும் அதேசமயம் குறைவதையும் கண்டதாகக் கூறியுள்ளனர்.

எனவே இதன மூலம் இதற்கான தடுப்பு மருந்துகளை மீண்டும் ஆய்வு செய்து அதற்கு ஏற்ப கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம் என நிஷந்த் குமார் கூறுகிறார்.

மும்பையில் உள்ள மூத்த மருத்துவர் ஒருவர் பேசுகையில் இன்றளவும் கொரோனாவிற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இடையிலான தொடர்பை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அதில் உறுதியான தகவலைக் கண்டறியமுடியவில்லை என்று கூறியுள்


Next Story