உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா


உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Sept 2020 3:45 AM IST (Updated: 2 Sept 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாநிலத்தின் பண்டா நகரில் உள்ள புட்டா குடான் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கான்பூரை சேர்ந்த நீலான்சு சுக்லா (வயது28) என்ற பத்திரிகையாளர் கொரோனாவால் உயிரிழந்தார்.

Next Story