எல்லையில் அத்துமீறும் சீனா: சீனாவுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை
எல்லைப் பிரச்சினை பற்றி இந்தியா - சீனா இடையே இன்று படைப்பிரிவு தளபதிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
சீன ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்ததாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்ரீவாஸ்தவா,
எல்லையில் பிரச்சினையை தீர்க்க கடந்த மூன்று மாதங்களாக இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் சீன ராணுவம் கடந்த மாதம் 29 ஆம் தேதி நள்ளிரவு 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பாங்காங் ஏரியின் தென் கரையில் சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
இந்த ஊடுருவலை இந்திய ராணுவம் தக்க சமயத்தில் தடுத்தது. இருநாட்டிற்கு இடையில் எட்டப்பட்ட புரிதல்களை சீனா முற்றிலும் புறக்கணிக்கிறது. எல்லைப்பகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா உறுதியாக இருக்கிறது.
எல்லைப் பிரச்சினை பற்றி இந்தியா - சீனா இடையே இன்று படைப்பிரிவு தளபதிகள் மட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பான்காங் ஏரி பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்ட பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story