ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோருக்கு கொரோனா தொற்று உறுதி


ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 2 Sept 2020 1:37 PM IST (Updated: 2 Sept 2020 1:37 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், 'நான் இன்று கொரோனா பரிசோதனை செய்தேன். சோதனை முடிவில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 4-5 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். கடந்த காலங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

Next Story