பா.ஜ.க. அரசின் தவறான நடவடிக்கையால் பின்தங்கும் இந்தியா - ராகுல்காந்தி குற்றச்சாட்டு


பா.ஜ.க. அரசின் தவறான நடவடிக்கையால் பின்தங்கும் இந்தியா - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Sept 2020 2:55 PM IST (Updated: 2 Sept 2020 2:55 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. அரசின் தவறான நடவடிக்கையால் பின்தங்கும் இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கை பேரழிவுகளால் நாடு தொடர்ந்து உலகளவில் பின்தங்கி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது.

(1) வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.
(2) 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.
(3) 12 கோடி வேலையிழப்புகள்.
(4) மத்திய அரசு தனது ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு செலுத்தவில்லை.
(5) உலகிலேயே மிக அதிகமாக நாள்தோறும் புதிதாக கொரோனா நோயாளிகள் உருவாகி வருகிறார்கள்.
(6) எல்லையில் வெளிநாட்டுப் படைகளின் அத்துமீறல் தொடர்ந்து இருந்து வருகிறது”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  

Next Story