மூன்றாவது இந்தியா-அமெரிக்க தலைமை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நாளை சிறப்புரை
அமெரிக்க இந்திய மூலோபாய மற்றும் கூட்டாளர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்தியா-அமெரிக்க தலைமை உச்சி மாநாட்டில் நாளை பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
வாஷிங்டன்
அமெரிக்க இந்திய மூலோபாய மற்றும் கூட்டாளர் மன்றம் (யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப்) ஏற்பாடு செய்த மூன்றாவது இந்தியா-அமெரிக்க தலைமை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நாளை சிறப்புரையாற்றுகிறார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி தனது உரையை இரவு 9 மணிக்கு ஐ.எஸ்.டி.யில் தொடங்குவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 31 அன்று தொடங்கிய 5 நாள் உச்சிமாநாட்டின் முக்கிய குறிக்கோள் “அமெரிக்க-இந்தியா புதிய சவால்களை வழிநடத்துவது குறித்து ஆகும்.
இதில் உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் ஆற்றல், இந்தியாவின் எரிவாயு சந்தையில் வாய்ப்புகள், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான வணிகத்தை எளிதாக்குதல், தொழில்நுட்ப வாய்ப்புகளில் பொதுவான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் போன்ற பல்வேறு விஷயங்களை பேசுவதற்கு ஆகும்.
இந்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப் என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மைக்காக 2017 இல் நிறுவப்பட்டது. பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வலுவான மற்றும் ஆற்றல்மிக்க உறவை வளர்ப்பதில் யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. வளர்ச்சி, தொழில் முனைவோர், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமை ஆகியவை அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குகின்றது.
Related Tags :
Next Story