புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகி சுப்பிரமணியன் கொரோனாவால் உயிரிழப்பு


புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகி சுப்பிரமணியன் கொரோனாவால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 Sept 2020 9:48 AM IST (Updated: 3 Sept 2020 9:48 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்பிரமணியன் (வயது70) கொரோனாவால் உயிரிழந்தார்.

புதுச்சேரி,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது.  6 மாதங்கள் ஆகிவிட்டாலும் கூட நாட்டில் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை. உயிரிழந்த சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story