இந்தியாவில் ஒரே நாளில் 68,585 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்


இந்தியாவில் ஒரே நாளில் 68,585 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்
x
தினத்தந்தி 3 Sept 2020 10:35 AM IST (Updated: 3 Sept 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,585 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியின் ஆவேச தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

இந்தியாவில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 83 ஆயிரத்து 833 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.01 லட்சத்திலிருந்து
29.70 லட்சமானது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66,333 லிருந்து 67,376 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,043 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் ஒரே நாளில் 68,584 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 8.15 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.76% குணமடைந்தோர் விகிதம் 76.98% ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.01 லட்சத்திலிருந்து 29.70 லட்சமானது. இந்தியாவில் ஒரே நாளில் 11.72 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4.55 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story